திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். இவரது ஒன்றரை வயதுக் குழந்தை புவனேஷ்.
தயாளன், அத்திமாஞ்சேரி பேட்டையில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் அங்கு சென்று, தன் மாமியார் வீட்டில் தங்கி, தீமிதி திருவிழாவில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு நேற்று முன்தினம் புவனேஷுக்கு இட்லி ஊட்டும் போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, புவனேஷ், திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை புவனேஷ், ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.