தேர்தல் பிரச்சார பேச்சுக்கு விளக்கம் கேட்டு அமைச்சர் வளர்மதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்துக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தொடர்பாக அமைச்சர் வளர்மதி பிரச்சாரத்தின்போது பேசியதாக கூறப்படுகிறது. இத்தகவல், தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து, விளக்கம் கேட்டு, வளர்மதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தொடர்ந்து, விளக்கம் அளித்துள்ள வளர்மதி, ஆவணங்களை அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.