தமிழகம்

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சபா.ராஜேந்திரன். முன்னாள் எம்எல்ஏ. இவர் வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் நெய்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதே ஊரை சேர்ந்தவர் சொரத்தூர் ராஜேந்திரன். இவர் அதிமுக சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது இவர் அந்த தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார். இவரது தம்பி வழக்கறிஞர் ராஜசேகர். இவர் நெய்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். ஒரே ஊரில் மூன்று பேர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது சொரத்தூர் கிராம மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT