சிவகங்கை: பிரசாந்த் கிஷோரின் யோசனைகளை ஏற்று அமல்படுத்தினால் காங்கிரஸுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியாவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் படித்த பெரிய மேதை. அவருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது. அதிமுக பெரிய அரசியல் கட்சி. அக்கட்சித் தலைமையில் உள்ள குழப்பத்தால், ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட முடியவில்லை. இந்திய தேர்தல் புள்ளி விவரங்களை நன்கு தெரிந்தவர் பிரசாந்த் கிஷோர். அவரது யோசனைகளை அமல்படுத்தினால் காங்கிரஸுக்கு பயனுள்ளதாக இருக்கும். இலங்கையில் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா நேரடியாகத் தலையிட்டு உதவ வேண்டும். பணத்தை நம்முடைய மேற்பார்வையில்தான் செலவு செய்ய வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.