தமிழகம்

கூட்டணிக்கு வராத ஆத்திரத்தில் தேமுதிகவை அழிக்க திமுக சதி: வைகோ பகிரங்க குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

கூட்டணி சேர முன்வராததால் தேமுதிகவை உடைக்க திமுக சதி செய்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

மதுரையில் நேற்று நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது: கருத்துக் கணிப்புகள் அனைத் தும் பொய். இதன் பின்னணியில் திமுக, அதிமுக உள்ளன. கூட்டணிக்கு வராமல் ஒதுங்கும் சில கட்சிகளை தங்களது கூட்ட ணிக்கு அழைக்கும் தந்திரம் இது. தமிழகத்தில் அதிமுகவின் வாக்கு சதவீதம் 12 சதவீதமும், திமுகவின் வாக்கு சதவீதம் 8 சதவீதமும் குறைந்துள்ளது.

சிறுதாவூர் பங்களாவுக்கு இரு கண்டெய்னர்களில் பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணை யரிடம் புகார் அளிக்கப்பட்டது. இரவோடு இரவாக மத்திய படையை அனுப்பி சோதனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காஞ்சிபுரம் ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் ஆகியோரை விசாரிக்கு மாறு தேர்தல் ஆணையர் சொல்லியதாகவும், அவ்வாறு எதுவும் இல்லை என அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். தேர்தல் ஆணையர் மீது நம் பிக்கை வைத்துள்ளோம். அந்த நம்பிக்கையை அவர் கெடுக்கக் கூடாது.

திமுக கூட்டணியில் மதிமுக சேர மறுத்தபோது முக்கிய நிர்வாகிகளை இழுத்து மதிமுகவை அழிக்க திமுக முயற்சி செய்தது. பலருக்கு சீட் தருவதாக அழைத்துச் சென்றனர். அவர்கள் போனதால் மதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. தூத்துக்குடி, நெல்லை, குமரியில் மதிமுக முன்பைவிட இப்போது வலு வாக உள்ளது.

திமுக கூட்டணிக்கு வர மறுத்ததால் தேமுதிக நிர்வாகி களை இழுத்து தேமுதிகவை அழிக்க முயற்சி செய்து வரு கின்றனர். இதனால், தேமுதிக வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக சேர்ந்த ஆத்திரத்தில் இந்த வேலையை திமுக செய்கிறது.தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேரம் பேசியதற்கான ஆதா ரத்தை நீதிமன்றத்தில் தாக் கல் செய்வேன்.

SCROLL FOR NEXT