மாம்பழம் சின்னத்தில் போட்டியிட சொன்னதால் பாமகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட கொங்குநாடு ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணியில் இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதிமுக, திமுக தவிர அன்புமணி ராமதாஸை முதல் வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். ஆனால் கூட்டணிக்கு யாரும் வரவில்லை. பாஜாகவுடனான பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து 234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைமை அறிவித்தது.
இந்நிலையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தும் உடன் பாடு ஏற்படவில்லை.
இதுதொடர்பாக அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறும்போது, ‘மாம்பழம் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று பாமக நிபந்தனை விதித் தது. இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பாமகவுடனான கூட்டணி முடிவை கைவிட்டுள்ளோம். அதே நேரம் பாஜக கூட்டணியில் 4 தொகு திகளை தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதன்படி, கோபிசெட்டிப்பாளையம், குமாரப்பாளையம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர், தருமபுரி மற்றும் திருப்பூர் தொகுதிகளை ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். எங்களுடைய சின்னத்தில் போட்டியிடுகிறோம்’ என்று தெரிவித்தார்.
ராஸ்டிரிய ஜனதா தளம்
ராஷ்டிரிய ஜனதா தளம் பாமகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழக தலைவர் கவுரி சங்கரிடம் கேட்டபோது, “எங்கள் கட்சியின் தலைமை தெரிவித்ததால் திமுக வுக்கு கொடுத்து இருந்த ஆதரவை வாபஸ் பெற்று விட்டோம். பாமகவுடன் கூட்டணி தொடர்பாக முதல்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கி றோம். உடன்பாடு ஏற்படாவிட் டால் தனியாக போட்டியிட முடிவு செய்து இருக்கிறோம்” என்றார்.