தமிழகம்

விஜயகாந்துக்கு துரோகம் இழைத்துவிட்டார் சந்திரகுமார்: தேமுதிக எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ்

செய்திப்பிரிவு

சந்திரகுமார் தேமுதிகவுக்கும், விஜயகாந்துக்கும் துரோகம் செய்துள்ளார் என்று தேமுதிக எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் கூறியுள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தேமுதிக விலக வேண்டும் என அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் வலியுறுத்தியுள்ள நிலையில், தேமுதிக எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னையில் அழகாபுரம் மோகன்ராஜ் செய்தியாளர்களிட்ம கூறியதாவது:

''சுயநலவிரும்பிகளுக்கான கட்சி தேமுதிக அல்ல. அதிருப்தியாளர்களால் தேமுதிகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அனைவரின் முடிவுக்கு பின்னரே விஜயகாந்த் கூட்டணி பற்றி அறிவித்தார்.

தேமுதிக அதிருப்தியாளர்களாக உள்ள மாவட்ட செயலாளர்கள் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும். அதிருப்தியாளர்கள் விஜயகாந்துடன் இருந்த போது ஏன் கருத்து சொல்லவில்லை?

விஜயகாந்தே தேமுதிக; தேமுதிகவே விஜயகாந்த். அவர் பின்னால் தேமுதிக அணிவகுக்கும்

கூட்டணி குறித்த கடிதத்தை சந்திரகுமார் கொடுத்ததாக பொய் கூறுகிறார். அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. சந்திரகுமார் தேமுதிகவுக்கும், விஜயகாந்துக்கும் துரோகம் செய்துள்ளார்.''

இவ்வாறு அழகாபுரம் மோகன்ராஜ் கூறினார்.

SCROLL FOR NEXT