சென்னை: உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களில் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இதன்படி வேலூர் மாநகர், வேலூர் புறநகர், சேலம் புறநகர், சேலம் மாநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி, வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், திருவள்ளூர் மத்தியம், கடலூர் மேற்கு,கடலூர் தெற்கு, தென்காசி தெற்கு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.