கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித் துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு தினம், புனித வெள்ளி, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்க ளிலிருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங் கியுள்ளனர்.
நேற்று காலை முதல் கொடைக் கானலின் நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே டோல்கேட்டில் 3 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. வாகனங்கள் அப் பகுதியை கடந்து செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேலானது.
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக உரிய நேரத்தில் தங்கள் ஹோட்டல் அறைக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல முடியாமல் சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால், போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸாரை அப்பகுதியில் நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.