தமிழகம்

ஏப்.19-ல் மகாவீர் ஜெயந்தி: மதுக்கடைகளை மூட சென்னை ஆட்சியர் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னையில் ஏப்ரல் 19-ம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் ஏப்ரல் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை, மகாவீர் ஜெயந்தி தினத்தன்று சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT