மதுவிலக்கு குறித்து பேசும் அருகதை கருணாநிதிக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், திருவில்லி புத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சிவகங்கை, மானாமதுரை, பரமக் குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 14 தொகுதிகளில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவரும் முதல்வருமான ஜெயலலிதா விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் உள்ள காந்தி நகரில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாதவது:
கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தி ருந்த அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட் டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் சொல்லாததையும் செய்துள்ளேன். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதும் இன்னும் பல திட்டங்களை நான் செயல்படுத்துவேன்.
மீன்பிடி தடை காலத்தில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகைகள் காலத்துக்கு ஏற்ப உயர்த்தி வழங்கப்படும். நாட்டுப் படகுகளில் இயந்திரம் பொருத்த 50 சதவீத மானியம், டீசலுக்கு விற்பனை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டுப் படகுகளுக்கு மானியத்தில் மண் ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
50 சதவீத மானியம்
தொலைதூர கடல் பகுதியில் மீன் பிடிக்க ஏதுவாக ரூ.30 லட்சம் வரை 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதை கொண்டுவந்தது அதிமுக அரசு மட்டும்தான்.
எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருவது மீனவர்கள் அனை வருக்கும் நன்றாகத் தெரியும்.
மத்திய அரசை வலியுறுத்தி படகுகளை திரும்பப்பெற நட வடிக்கை எடுக்கப்படும். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப் பட்டதுதான் தற்போதைய பிரச்சி னைக்கு காரணம். 1974-ல் இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இலங் கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப் பட்டது. அதைத்தடுக்க அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
உச்ச நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்று மீனவர் பயன்பெற வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. கச்சத்தீவு மீட்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி தொடரும் என உறுதியாகக் கூறுகிறேன்.
யார் வேண்டுமானாலும் மது விலக்கைப் பற்றி பேசலாம். கருணா நிதியும், திமுகவும் பேசக் கூடாது. மது விலக்கை பேசும் அருகதை அவர்களுக்கு இல்லை. 1937-ல் சேலத்தில் முதல் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டு விரிவுபடுத் தப்பட்டது.
1948-ல் காந்தி பிறந்த நாளில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. 1971-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் பூரண மது விலக்கு நீக்கப்பட்டது. அந்த கருணாநிதி இன்று மதுவிலக் கைப்பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானதாகும்.
அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு பூரண மது விலக்கு எட்டப்படும் என்றார்.