தமிழகம்

பெண் கொலையில் காதலன் கைது: திருமணம் செய்ய மறுத்ததால் கொன்றதாக வாக்குமூலம்

செய்திப்பிரிவு

பாரிமுனையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வினோதினி (23). இவரது பெற்றோர் இறந்துவிட்டனர். துரைப்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி தரமணியில் உள்ள தனியார் மென்பொருள் நிறு வனத்தில் வேலை பார்த்தார். கோவிலம்பாக்கம் அருகே நன்மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(18) என் பவரும், வினோதினியும் காத லித்தனர். இவர்களின் காதல் விவகாரம் வினோதினியின் வீட்டுக்கு தெரியவரவே, அவர்கள் வினோதினியைக் கண்டித்து, பாரி முனை அங்கப்பநாயக்கன் தெருவில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பினர்.

கடந்த சில நாட்களாக அலு வலகத்துக்கு செல்லாமல் பாட்டி வீட்டிலேயே தங்கி இருந்தார் வினோதினி. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் கழிப்பறையில் நேற்று முன்தினம் காலையில் வினோதினி இறந்து கிடந்தார். வடக்கு கடற்கரை போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. உடனே கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

வினோதினி பயன்படுத்திய செல்போனில் பதிவாகியுள்ள எண்களை வைத்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையிலேயே தமிழ்ச்செல்வன் சிக்கினார். அவரை நேற்று முன்தினம் இரவில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் தெரியவந்தன.

தமிழ்ச்செல்வன் போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘‘வினோதினி என்னைவிட 5 வயது பெரியவர். மேலும் எனக்கு சரியான வேலை இல்லை. இதனால் எங்களின் திருமணத்துக்கு வினோ தினியின் உறவினர்கள் சம் மதிக்கவில்லை. அவர்கள் வற் புறுத்தியதால் வினோதினியும் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வினோதினிக்காக நான் நிறைய செலவு செய்து இருக்கிறேன். அத்தனையையும் அனுபவித்துவிட்டு என்னை ஏமாற்றுகிறாரே என்ற வெறுப்பும் ஏற்பட்டது.

வினோதினிக்கு நான் ஒரு செல்போனும் வாங்கி கொடுத்திருந் தேன். ‘நான் வேண்டாம் என் றால் எனது செல்போனை எதற்கு வைத்திருக்கிறாய் அதை திருப்பிக்கொடு’ என்று கேட்டேன். செல்போனை கொடுப்பதற்காக வணிக வளாகத்தின் கழிப்பறை அருகே வந்தபோது கழுத்தை நெரித்து கொலை செய் தேன்" என்று தமிழ்ச்செல்வன் கூறியதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT