தமிழகம்

காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

செய்திப்பிரிவு

காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இன்று காலையில் காட்டுமன்னார் கோவில் தொகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் முத்துக்குமாரசாமியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறது.

SCROLL FOR NEXT