கரூரில் பல கோடி ரூபாய் பறி முதல் செய்யப்பட்டுள்ள இடத் துக்கு அமைச்சர்கள் வந்து சென்றதாக எழுந்துள்ள சந்தேகம் குறித்தும், அங்கு எத்தனை கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் ஜெயலலிதா விளக் கம் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணா நிதி நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:
‘கரூரில் அன்புநாதன் என்பவரது குடோனில் ரூ.10 லட்சத்து 33 ஆயிரம் ரொக்கம், அவரது வீட்டில் ரூ.4 கோடியே 77 லட்சம், 3 கார், ஒரு டிராக்டர், ஒரு ஆம்புலன்ஸ், 12 பணம் எண்ணும் இயந் திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டு வருமான வரித் துறைக்கு தகவல் அளிக்கப்பட் டுள்ளது’ என்று கரூர் மாவட்ட ஆட்சியரே கூறியுள்ளார்.
பணம் பறிமுதல் செய்யப் பட்ட வீட்டில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்பு கேம ராவை வருமான வரித் துறை யினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டுவந்து இறக்கப்படும் காட்சிகள், அதிமுக அமைச்சர்கள் சிலர் அங்கு வந்துசெல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கேமரா வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஜனநாய கமும், தேர்தல் நடத்தை விதிகளும் எப்படி உள்ளன என்பதற்கு இதுதான் சான்று. அன்புநாதன் யார்? மணிமாறன் யார்? இவர்களுக்கும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இந்த பணப் பரிமாற்றம்? இதற் கெல்லாம் பதில் சொல்லாத முதல்வர் ஜெயலலிதா, ஏதோ தமிழகத்தை கடந்த 5 ஆண்டு காலமாக நான் ஆட்சி செய் தததுபோல, என்னைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.
கேமராவில் பதிவான காட்சி கள் பற்றிய விவரங்கள் என்ன? கைப்பற்றப்பட்டது நாலரை கோடி ரூபாயா, 100 கோடி ரூபாயா, 250 கோடி ரூபாயா என்பன போன்ற கேள்விகள், சந்தேகங் களுக்கு முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு முறையான பதில் சொல்லிவிட்டு என்னிடம் கேள்வி கேட்க வேண்டும். இல்லாவிட்டால், பணம் கொடுத்து தேர்தலில் வென்று மேலும் மேலும் பணத்தை குவிப்பதற்குதான் இத்தனை நாடகமும், என்று அனைவரும் நினைப்பது உறுதியாகிவிடும்.