கரோனா சிகிச்சை வார்டு | கோப்புப் படம் 
தமிழகம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளே இல்லை: டீன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துமனை கரோனா சிகிச்சை பெறுபவர்கள் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளதாக டீன் தேரனிராஜன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்ட வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 229 பேர் மட்மே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும 95 பேர் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது.
சென்னையில் கரோனா தொற்று ராஜீவ் காந்தி, ஓமந்துரார், கீழ்பாக்கம், ஸ்டான்லி உள்ளிட்ட நான்கு அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தான் தமிழகத்தில் முதன் முதலாக கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2020ம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி ஓமனில் இருந்து காஞ்சிபுரம் வந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் முதன்முதலாக தொற்று பாதிக்க்பபட்ட இவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் தான் சிக்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ராஜீவ் காந்தி மருத்துவமனை கரோனா இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது. இது தொடர்பாக ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன் கூறுகையில், "இன்றைய தினம் ராஜீவ் காந்தி மருத்துமனையில் கரோனா பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சை பெறவில்லை என்றும் இந்த நிலையை எட்ட உதவிய அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT