தமிழகம்

நாளை 2-வது பட்டியல்: எச்.ராஜா தகவல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர் தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இரண்டாவது பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

கடலாடியில் பாஜக பிரமுகர் இல்ல விழாவில் நேற்று கலந்து கொண்ட எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஹீரோவாக செயல்படும். இது தமிழக மீனவர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும். கருத்துக் கணிப்புகளை பாஜக நம்பவில்லை. 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT