தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது. அந்த அணியில் மஜக-வுக்கு நாகப் பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
எம்.தமிமுன் அன்சாரி(40):
நாகப் பட்டினம் மாவட்டம் தோப்புத்துரை யைச் சேர்ந்தவர். சென்னை புதுக்கல்லூரியில் பயின்றவர். மாணவர் பேரவை தலைவ ராக இருந்தார். மாணவர் பருவத்திலேயே கவிதை, கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 2011-ல் அதிமுக அணியில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக போட்டி யிட்டு தோல்வியடைந்தார்.
எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது(44):
சிவ கங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர். இளையான்குடி ஜாஹிர் ஹுசைன் கல்லூரியில் எம்.காம் படித்த வர். 1998-ல் சென்னையில் குடியேறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தினம் தினம் எனும் பெயரில் பத்திரிகை நடத்தி வருகிறார்.