தமிழகம்

இந்தியை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

சென்னை; டெல்லியில் நாடாளுமன்றத்தின் அலுவல் மொழி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியபோது, ‘‘அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம்’ என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. தாய்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து, ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக இந்தியை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT