‘தி இந்து’ மற்றும் பொதிகை தொலைக்காட்சி இணைந்து வழங் கும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடர் 31-வது வாரமாக தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகிறது.
இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை பயணத்தை விளக்கும் ‘குறையொன்றுமில்லை’ வாழ்க்கைத் தொடர் நிகழ்ச்சி பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒளிபரப்பாகி வருகிறது.
‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக் காட்சி வழங்கும் இந்நிகழ்ச்சியில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் வாழ்க்கை சம்பவங்களுடன், அரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகளும் இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்ச்சி கடந்த 30 - வாரங்களாக ‘பொதிகை’ தொலைக் காட்சியில் சனிக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் சிறுவயது கச்சேரிகள் தொடங்கி அவரது இசை பயணத் தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த ‘மீரா’ படத்தின் சில காட்சிகளும், குறிப்பிட்ட சில பாடல் களின் தொகுப்புகளும் இதுவரை ஒளிபரப்பாகியுள்ளன.
இதன் தொடர்ச்சியாக இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் ஸ்ரீராம நவமியையொட்டி ராமபிரான் மீது எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி வெளியுலகுக்கு அதிகம் பரிச்சயமில்லாத சில அபூர்வமான பக்திப் பாடல்களின் தொகுப்பு ஒளிபரப்பாக உள்ளது.
துளசிதாசர், குருநானக், சதாசிவ பிரும்மேந்திரர் மற்றும் முத்து ஸ்வாமி தீக்ஷிதரின் ராம பட்டா பிஷேக வர்ணனைப் பாடலான ‘மாமவ பட்டாபிராமா’ உள்ளிட்ட பாடல்கள் இசை ரசிகர்களை நிச்சயம் கட்டிப்போடும். இதன் மறு ஒளிபரப்பை செவ்வாய்க் கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.