கடலூர் மாவட்டத்தில், மூத்த அமைச்சர் ஒருவருக்கே மாவட்டநிர்வாகம் முக்கியத்துவம் அளிப் பதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முத்தாண்டிக்குப்பத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அதிகாரிகள் அனைவரும் பங் கேற்றனர்.
கடலூர் மாவட்டம் திமுக அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்குஎன பிரிக்கப்பட்டு, கிழக்கு மாவட்டச் செயலாளராக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும், மேற்கு மாவட்டச் செயலாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனும் உள்ளனர். இந்த நிலையில் மாவட்டத்தில் அரசு சார்பில்நடைபெறும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல் வத்துக்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளிக்கிறது. அமைச் சர் சி.வெ.கணேசன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் போதிய முக்கியத்துவம் அளிக்காமலும், கூடுமானவரை தவிர்த்து வருவதாகவும் சமூக வலை தளங்களி லும் அவ்வப்போது பதிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு மாவட்ட நிர்வாகமும் மறுப்பேதும் தெரிவிக்காமல் மவுனம் காத்தது.
மேலும் கடலூர் மேற்கு மாவட் டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் அமைச்சர் சி.வெ.கணேசனை சந் திக்கும் போதெல்லாம், ‘மாவட்ட ஆட்சியர் நம்ம நிகழ்ச்சிக்கெல்லாம் வருவதே இல்லையே!' என ஆதங்கப்பட்டு பேசியுள்ளனர்.
இந்த நிலையில் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சி.வெ.கணேசனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே ஆட்சியர் பாலசுப்ரமணியம், கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்சித்சிங், பவன்குமார் ஜி.கிரியப்பனவர், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் கற்பகம், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவி யரசு, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா என மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அலுவலர்கள் அனைவரும் வந்தனர். இவர்கள், அமைச்சரை வரவேற்க, மாவட்ட எல்லைப் பகுதிக்கே சென்றிருந்தது குறிப் பிடத்தக்கது.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி யில் வருவாய் துறை,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் வட்டத்தை சேர்ந்த 194 பயனாளிகளுக்கு ரூ.13,191,146 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.நிகழ்ச்சியில் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் சபா.பாலமுருகனும் பங்கேற்றார்.
நேற்றைய நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றது குறித்து அமைச்சர் சி.வெ.கணேசனையும், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தையும் தொடர்பு கொண்டபோது, இருவரும் பேச முன்வரவில்லை.
அமைச்சரை வரவேற்க, மாவட்ட எல்லைப் பகுதிக்கே சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.