சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் தேர்தல் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வுசெய்ய, இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ள மத்திய தேர்தல் பார்வையாளர்கள் ராஜூ சின்ஹா, அனுஜ் அரோரா, வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். அவர்கள் நேற்று சென்னை மாவட்ட தேர் தல் அலுவலகத்துக்கு வந்து, தேர்தல் அலுவலக பணிகள், கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு மையம் ஆகிய வற்றை பார்வையிட்டனர். பின்னர் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல், அதை முறையாக அரசியல் கட்சிகள் கடைபிடிக்க மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற் கொண்டுவந்த பணிகள், வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகு, மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். அவை குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திர மோகன், கூடுதல் தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் ஆகியோர், மத்திய பார்வையாளர் குழுவுக்கு விளக்கினர்.
இந்த மத்திய பார்வையாளர் குழுவினர், பல்வேறு மாவட் டங்களுக்குச் சென்று, தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்துவிட்டு, ஏப்ரல் 24-ம் தேதி சென்னை திரும்புகின்றனர். அதனைத் தொடர்ந்து, மத்திய தேர்தல் செலவின பார்வை யாளர்கள் 25-ம் தேதி தமிழகம் வருகின்றனர். அவர்கள், பின்னர் தமிழக தேர்தல் பணிகளை கண்காணிக்க உள்ளனர்.