திமுக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பாக முறையீடு செய்தார்.
அப்போது ‘‘மூன்று ஆண்டு களுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரி யும் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவர். எனவே அதுபோன்ற அதிகாரிகள் மற்றும் அரசின் விருப்பத்தின்பேரில் பணி நீட்டிப்பு பெற்றுள்ளவர்களை தேர் தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. அதுபோன்ற அதிகாரிகளை பணி மாறுதல் செய்ய தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனுக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதை அவசர வழக்காக விசாரிக்க கோரினார். அதையேற்க மறுத்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் வழக்கை இன்று விசாரிப்பதாக கூறினார்.