தமிழகம்

சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் மட்டுமே: அன்புமணிக்கு வீடு, வாகனம் இல்லை

செய்திப்பிரிவு

பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு ரூ.30 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நகைகள், ரூ.50 ஆயிரம் கையிருப்பு என மொத்தம் ரூ.30 லட்சத்து 12 ஆயிரத்து 915 அளவுக்கு மட்டுமே சொத்துக்கள் இருப்பதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் நிலங்கள், வீடுகள் என அசையா சொத்துக்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை எனவும் எந்தக் கடனும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மனைவி சவுமியா பெயரில் ரூ.6.70 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள், ரூ.4.65 கோடிக்கு அசையா சொத்துக்கள் உள்ளன. 2 மகள்கள் பெயரில் ரூ.48 லட்சத்துக்கு அசையும் சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர தன் மீது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, புதுடெல்லி, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT