தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தேமுதிக அதிருப்தியாளர்கள் நீக்கப்பட்டது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம். அதில் நானோ, திமுகவோ தலையிட விரும்பவில்லை.
வைகோ தொடர்ந்து அபாண்டமான குற்றச்சாட்டுகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறார். அதற்காக நான் கவலைப்படவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் 2 நாட்களில் இறுதி செய்யப்படும்'' என்றார் ஸ்டாலின்.