தமிழகம்

ஆர்.கே.செல்வமணி, அருள் அன்பரசுவுக்கு எதிராக பிடிவாரன்ட்

செய்திப்பிரிவு

சென்னை: திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, முன்னாள் எம்எல்ஏ அருள்அன்பரசு ஆகியோர்கடந்த 2016-ல் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

அதையடுத்து அவர்களுக்கு எதிராக ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று முன்தினம்விசாரணைக்கு வந்தபோது ஆர்.கே.செல்வமணி, அருள் அன்பரசு ஆஜராகவில்லை. அதையடுத்து அவர்கள் இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்.23-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

SCROLL FOR NEXT