நடிகர் தனசேகரன் 
தமிழகம்

குமாரபாளையம் | நகைச்சுவை நடிகர் தனசேகரன் மாரடைப்பால் மரணம்

செய்திப்பிரிவு

நாமக்கல்: குமாரபாளையத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் அல்லிநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் (43). திருமணமாகாதவர். இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும், நடன குழுக்களில் நடனமாடியும் வந்தார். பார்ப்பதற்கு பிரபல சிரிப்பு நடிகர் கிங்காங் போல் இருப்பதால் இவரது நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.

திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் கிராம கோயில் திருவிழாவில் நடன நிகழ்ச்சி ஒன்றில் தனசேகரன் பங்கேற்று நடனமாடியுள்ளார். பின்னர், வீட்டுக்கு திரும்பிய தனசேகரன் காலை நீண்ட நேரமாகியும் எழவில்லை. பரிசோதனை செய்த மருத்துவர், மாரடைப்பில் தனசேகரன் இறந்து விட்டார் என கூறியுள்ளார். இதையடுத்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. நடிகர் உயிரிழந்தது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT