தூத்துக்குடி துறைமுகம் 2015- 16-ம் நிதியாண்டில் 36.85 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் 2015- 2016-ம் ஆண்டின் செயல்பாடுகள் குறித்து, துறைமுக நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2015-2016 நிதியாண் டில் 36.85 மில்லியன் டன் சரக்கு கள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையானது, கடந்த நிதியாண்டில் கையாண்ட 32.41 மில்லியன் டன்களுடன் ஒப்பி டுகையில் 13.7 சதவீதம் கூடுதலா கும். 2015- 2016-ம் ஆண்டுக்கு மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 36.80 மில்லியன் டன்களை விட 0.14 சதவீதம் கூடுதலாக கையாளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 36.85 மில்லியன் டன்களை கையாண்டு மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 36.80 மில்லியன் டன்களை கடந்துள்ளது.
6,11,714 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 9.29 சதவீதம் கூடுதலாகும். 27.37 மில்லியன் டன் சரக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில் கையாண்ட 23.99 மில்லியன் டன்களுடன் ஒப்பிடுகை யில் 14.09 சதவீதம் கூடுதலாகும்.
மேலும் கட்டுமானப் பொருட் கள், சரக்கு பெட்டக சரக்குகள், திரவ காஸ்டிக் சோடா, இயந்தி ரங்கள், இரும்பு பொருட்கள், சாம்பல், இலுமெனெட் மணல், கார்னெட் மணல், ஜிப்சம் மற்றும் சிமென்ட் போன்ற பொருட்களை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்ததால் ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்தின் இயக்க உபரி வருவாய் ரூ. 312.33 கோடி ஆகும். வரிக்கு முந்தைய நிகர உபரி வரு வாய் ரூ. 167.91 கோடி. இயக்க விகிதாச்சாரம் 44.04 சதவீதம்.