தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு 400-க்கும் மேற்பட்ட சிறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதரவு அளித்த தோழமை கட்சிகளில் 5 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அகில இந்திய முத்துராமலிங்க தேவர் முன்னேற்றக் கழகம் சமீபத்தில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து நேற்று முதல்வர் ஜெயலலிதா, அந்த அமைப்பின் நிறுவன தலைவர் எம்.முருகனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுகவுக்கு தங்கள் கட்சி அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் என் தலைமையிலான ஆட்சி தொடர, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற தாங்களும், தங்கள் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் களப்பணி ஆற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.