கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை குடுகுடுப்பைகாரர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகம்

கடலூரில் சாதி சான்று கேட்டு குடுகுடுப்பைகாரர்கள் நூதன போராட்டம்

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூரில் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி குடுகுடுப்பைகாரர்கள், குடுகுடுப்பை இசைத்து போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடுகுடுப்பை யுடன் குறிசொல்லும் குடுகுடுப் பைகாரர்கள் (கணிக்கர் சமுதாயம்)ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இதில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவிகள்11-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் சேர, சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பு பயிலமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாதி சான்றிதழ் வழங்கக் கோரி பல முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குடுகுடுப்பைகாரர்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுடன், சாதி சான்றிதழ் வழங்கக் கோரி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை குடுகுடுப்பை இசைத்து முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவ, மாண விகள், "தங்களின் பெற்றோர் போல நாங்கள் இனி குடுகுடுப்பு இசைக்க மாட்டோம்.

ஜோசியம் சொல்லமாட்டோம். படித்து அரசு வேலைக்கு செல்ல விரும்புகிறோம் உடனடியாக எங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்" என்று முழுக்கங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் கோட்டாட்சியர் அதியமான்கவியரசு மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT