தமிழகம்

மதுரை சுற்றுச்சாலையில் பாண்டி கோயில் சந்திப்பு மேம்பாலம் திறப்பு எப்போது? - கட்டி முடித்தும் தாமதமாவதால் தொடரும் நெரிசல்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை ‘ரிங்’ ரோடு பாண்டி கோயில் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் இன்னும் திறக் கப்படாமல் உள்ளது.

மதுரை சுற்றுச்சாலையில் சிவகங்கை சாலைச் சந்திப்பில் ரூ.50 கோடியில் மதுரை-திருச்சி நான்குவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டதால் வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.

தற்போது மேம்பால கட்டு மானப் பணிகள் நிறைவடைந்து திறப்புவிழாவுக்குத் தயாராக உள்ளது. மேம்பாலத்தில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள் ளன. ஆனால், இன்னமும் திறப்பு விழா நடைபெறவில்லை. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதி காரிகளிடம் கேட்டபோது, பதில் அளிக்கவில்லை.

மேம்பாலத்தால் என்ன பயன்?

தற்போது பாண்டிகோயில் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தால் சென்னை, திருச்சி மார்க்கத்தில் இருந்து நான்குவழிச் சாலையில் தென்மாவட்டங்க ளுக்குச் செல்லும் வாகனங்கள் இச்சந்திப்பில் நிற்காமல் நேரடி யாக மேம்பாலத்திலேயே செல்ல முடியும். இதேபோல் மாட்டுத் தாவணியில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் பாலத்துக்குக் கீழே இடதுபுறம் சர்வீஸ் சாலையிலும், சிவகங்கை, கருப்பாயூரணியில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் இடதுபுற சர்வீஸ் சாலையிலும் செல்லலாம்.

ராமநாதபுரம், தென்மாவட்டங் களில் இருந்து மாட்டுத்தாவணி, சிவகங்கை ரோடு, மேலமடை சந்திப்பு வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் மேம்பா லத்தின் மேற்குப்புறமுள்ள சர்வீஸ் சாலை வழியாகச் செல்ல முடியும். தற்போது இந்தச் சந்திப்பில் வாக னங்கள் நின்று செல்வதைத் தவிர்க்க பெரிய ரவுண்டானாவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT