திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலங் களவை குழுத் தலைவர் கனிமொழி, தனது பிரச்சாரத்தை நாளை சேலத்தில் தொடங்குகிறார்.
இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி வரும் 18-ம் தேதி சேலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். 19-ம் தேதி - நாமக்கல், 20 - ஈரோடு, 21 - திருப்பூர், 22 - கோவை ஆகிய மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்வார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி வரும் 23-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி மே 14-ம் தேதி வரை 14 நாட்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை கடந்த 15-ம் தேதி மதுரையில் தொடங்கினார். 22-ம் தேதி வரை 12 மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.