டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை சார்பில் ‘விழித்திரை சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்கள் குறித்த மாநாடு (ரெட்டிகான் - Reticon)’ சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று நடந்தது. டாக்டர் அகர்வால் கண் மருத் துவமனை குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந் தினராக கலந்துகொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
நாடுமுழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட கண் மருத்துவ நிபுணர்கள், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் ரெட்டினோ ஆராய்ச்சி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் டாக்டர்கள் செய்த 4 விழித்திரை அறு வைச் சிகிச்சைகள், மாநாட்டில் நேரடி யாக ஒளிபரப்பப்பட்டன.
இந்த மாநாட்டில் நீதிபதி பி.ராஜேந் திரன் பேசும்போது, “நாடுமுழுவதும் இருந்து வந்துள்ள டாக்டர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த மாநாடு பய னுள்ளதாக இருக்கும். கண்களில் புதிய நோய் மற்றும் விழித்திரை சிகிச்சை முறைகள் பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். கண் டாக்டர்கள் மக்களின் தேவைகளை அறிந்து பணி யாற்ற வேண்டும். குறிப்பாக பின்தங் கிய நிலையில் உள்ள மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும்” என்றார்.
டாக்டர் அமர் அகர்வால் பேசும் போது, “வளர்ந்து வரும் உலகில் விழித்திரை தொடர்பான நோய்கள் தான் பார்வை இழப்பு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளன. இதற்கு சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர் கள் இல்லை. சர்க்கரை நோயாளிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துக் கொள்வதன் மூலமாக பார்வை இழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்” என்றார்.