தமிழகம்

தமிழகத்தில் முக்கிய இடங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் ஏப். 20-ல் முற்றுகை: ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பு அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் முக்கிய இடங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களை வரும் 20-ம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர் ராஜு, திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

பல்வேறு தரப்பு மக்கள் போராட்டங்களை நடத்தியும், மதுவிலக்கு குறித்த எந்த அறிவிப்பையோ அல்லது கருத்தையோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவிக்கவில்லை.

மதுவுக்கு எதிராகப் பாடிய கோவன் மீதும், மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்ளிட்டோர் மீதும் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்துவோர் கைது செய்யப்படுகின்றனர். எனவே, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவதை மக்கள் ஏற்க வேண்டியதில்லை. அந்த வாக்குறுதி தேர்தலுக்காக அவர் நடத்தும் நாடகமே.

மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போராடினால்தான் மதுக் கடைகளை மூட முடியும். எனவே, வரும் 20-ம் தேதி தமிழகத்தில் முக்கிய இடங் களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ், மகஇக பாடகர் கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT