தமிழகம்

கோயில்களில் குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்: இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம்

செய்திப்பிரிவு

நாமக்கல்: அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும், என இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமையில் நடந்தது. நாமக்கல் நகர தலைவர் கோபிகருப்பையா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அண்ணாதுரை பங்கேற்றுப் பேசினார்.

கூட்டத்தில், கோயில்களில் காதல் என்ற பெயரில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் அடிக்கடி வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் உண்மையான பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கோயில்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும்.

அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் கடைகள் அமைக்க வேற்று மதத்தினருக்கு வாடகைக்கு விடக்கூடாது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT