தமிழகம்

சிக்னல் கோபுரத்தில் ஏறி எஸ்.ஐ மிரட்டல்

செய்திப்பிரிவு

மதுரவாயலில் சிக்னல் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருப்பவர் நாத்(55). மதுரவாயல் காவல் நிலையத்தில் இவர் பணிபுரிந்தபோது, இவர் மீதான சில புகார்களின் காரணமாக திருவேற்காட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் நாத் மீண்டும் மதுரவாயல் மீன் சந்தைக்கு வந்து மாமூல் வசூலித்ததாக புகார் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர் அதிகாரி ஒருவர் நாத்தை அழைத்து எச்சரித்து அனுப்பினார்.

இதில் மன உளைச்சல் அடைந்த நாத் நேற்று மாலையில் மதுரவாயல் மேட்டுக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பு அருகில் போலீஸாரின் வாக்கி-டாக்கி செயல்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள சிக்னல் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். விரைந்து வந்த போலீஸார் அவரிடம் சமாதானப்பேச்சு நடத்தி, அவரை கீழே இறக்கி வந்தனர். பின்னர் அமைந்தகரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT