தமிழகம்

செல்வமகள் சேமிப்பு திட்டம் வயது வரம்பு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மத்திய பத்திரிகை தகவல் அலு வலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெண் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்னும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தி யில் பெரியளவில் வரவேற்பு உள்ளது.

இந்த திட்டத்தை நோக்கி அதிகப் படியான கணக்குகளை ஈர்க்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள் ளது. அதன் விவரம் பின்வருமாறு:

செல்வமகள் சேமிப்பு கணக் கில் பிறந்த குழந்தை முதல் 14 வய தான சிறுமிகள் வரை இணைய லாம் என்ற நிலை இருந்தது. இனி 15 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். மேலும், அபராதக் கட்டணம், பணம் செலுத் தாமை போன்ற இக்கட்டுக்களால் வரும் விளைவுகளை தடுக்க ஆண்டு தோறும் ரூ.1000 வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை சேமிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு அதற்கான வட்டியும் தரப்படும்.

செல்வ மகள் சேமிப்புத் திட்டத் தில் கணக்குள்ள வைத்துள்ளவர் கள் தங்களது இருப்பிடத்தை மாற்றும் போது, அந்த கணக்கு முடித்து வைக்கப்படும். கணக்கை மாற்றமாகி செல்லும் இருப்பிடத்தில் உள்ள அஞ்சலகத்துக்கு மாற்ற விரும்பினால், உரிய முகவரி சான்றினை பெற்றுக் கொண்டு கணக்கு மாற்றியளிக்கப்படும்.

5 ஆண்டுகளை நிறைவு செய்த கணக்கை கொண்ட சேமிப்புதாரர், நோய்வாய்ப்படுவதல், அசம்பா விதங்களை சந்தித்து அபாய கட்டத்துக்கு செல்லுதல் போன்ற நிலையில் இருந்தால், அவரது கணக்கு முடித்து வைக்கப்பட்டு அவரது உறவினர் அல்லது காப்பாளரிடம் அளிக்கப்படும். 18 வயது நிறைவு செய்தவர்கள், 10-ம் வகுப்பு முடித்தவர்கள், தங்களின் மேற்படிப்புக்காக சேமிப்புத் தொகையில் பாதி அளவை பெற்றுக் கொள்ளலாம். 21 வயதிலோ அல்லது திருமணம் ஆன ஒரு மாதத்திலோ பெண்கள் தங்களின் கணக்கை முடித்துக் கொள்ளலாம். மேலும், வட்டி விகிதம் ஏப்ரல் 1 முதல் 8.6 சதவீதமாக்கப்படும்.

SCROLL FOR NEXT