விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகிறார். 
தமிழகம்

இட ஒதுக்கீடு காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முடக்கப்பட்ட குலசேகரன் ஆணையத்தை செயல்பட வைக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விழுப்புரம்: தமிழகத்தில் இடஒதுக்கீடு காப் பாற்றப்பட வேண்டுமென்றால் முடக்கப்பட்ட குலசேகரன் ஆணை யத்தை செயல்பட வைத்து, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இட ஒதுக்கீடு வழங்குவதில் முன்னோடி மாநிலம் தமிழகம். இன்று இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டின் ஆபத்தை உணர்ந்த ஜெயலலிதா, இதற்கான சட்டம் இயற்றி, அதை 9-வது அட்டவணையில் சேர்ந்து சட்டப் பாதுகாப்பு கொடுத்தார். நேற்று (நேற்று முன்தினம்) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒப்புக்கொண்ட நீதிமன்றம் முழுமையான தரவுகள் இல்லை என சொல்லியுள்ளது. 1931-ம் ஆண்டுஇந்தியாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புதான் தற்போதுவரை அமல்படுத்தப்பட்டு வருகி றது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அமல் படுத்தப்படவில்லை. அம்பா சங்கர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அரசு சொல்கிறது. ஆனால் 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி, அம்பா சங்கர் அறிக்கையின் பேரில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என தெரிவித்தார். அதன் படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இன்று வரை தொடர்கிறது.

69 சதவீத இட ஒதுக்கீடை பாதுகாக்க வேண்டும் என்றால் முழுமை யான சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று 21.12.2020 அன்று புதிதாக முன்னாள் நீதியரசர் குலசேகரன் தலைமையில் குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இதை நடைமுறைப் படுத்தவில்லை. இடஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை. அம்பா சங்கர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. குலசேகரன் குழுவை ஏன் முடக்கியது? இன்றைய தீர்ப்பு69 சதவீதத்தை பாதிக்கும். உடனேகுலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும்.

தமிழகத்தில் லாட்டரி டிக்கட் டால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றியது அதிமுக அரசு. ஆன் லைன் ரம்மியை தடை செய்தது. இது தொடர்பான வழக்கில் தமிழகத்திலிருந்து ஒரு வழக்கறிஞரை கொண்டும் அரசு வாதாடவில்லை. பொதுமக்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் இந்த அரசு துச்சமாக எண்ணுகிறது. இடஒதுக்கீடு காப்பாற்றப்பட வேண்டுமென்றால் முடக்கப்பட்ட குலசேகரன் ஆணையத்தை செயல்பட வைத்து அந்த அறிக் கையை உச்ச நீதிமன்றத்தில் தாக் கல் செய்யவேண்டும்.

இந்த வழக்கை தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும், உச்ச நீதிமன்றத்திலும் சரியாக வாதாடவில்லை.

இந்த ஒரு ஆண்டில் இந்த அரசு செய்த சாதனை என்னவெனில் பாலியல் கூட்டு வன்முறை என்பது. அங்கொன்றும் இங்கொன்று மாக இருந்த இந்த சம்பவம் தற்போது எங்கும் நிறைந்துள்ளது. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்று பொள்ளாச்சி சம்பவத்தை பூதகரமாக் கியவர்கள் இன்று வாய்மூடி கிடக்கின்றனர். பாலியல் வன் கொடுமையை கண்டித்து விரைவில் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். முதல்வர் 5-ம் தேதி திறக்கவுள்ள திண்டிவனம் சிப்காட், உணவுப்பூங்கா போன்ற வைகளை அறிவித்தது அதிமுக. அதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம்எல்ஏக்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூனன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT