ஜெயலலிதாவின் வெற்று அறிவிப்புகளை மக்கள் நம்ப மாட்டார்கள்; ஏமாற மாட்டார்கள் என்று ராமதாஸ் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.
அதிமுக மீண்டும் ஆட்சியமைத்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜெயலலிதாவின் வெற்று அறிவிப்புகளை மக்கள் நம்ப மாட்டார்கள்... ஏமாற மாட்டார்கள்!
மதுவுக்கு எதிராக பாமக உருவாக்கிய மக்கள் எழுச்சியால் ஜெயலலிதாவுக்கு அச்சம். அதனால் தான் இந்த வெற்று அறிவிப்பு
மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கடந்த 5 ஆண்டுகளில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே?
தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று கூறிவந்த ஜெயலலிதாவுக்கு இப்போது திடீர் ஞானம் எங்கிருந்து வந்தது?
மதுவிலக்குக்கான போராட்டத்தை ஒடுக்கிய ஜெயலலிதா, என்னை இருமுறை கைது செய்த ஜெயலலிதா மதுவிலக்கு பற்றி பேசுவது நகைச்சுவை'' போன்ற சில ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.