சென்னை: தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றவே பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் சிறு வணிகர்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்ஸ்டாலின், முதல்வரானதும் வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் பெருநகரங்களில் ஷாப்பிங் மால் அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அரசு முறைப் பயணத்துக்கு தனி விமானத்தில் ஏன் குடும்பத்தோடு சென்றார் என்ற என்கேள்விக்கு தனியார் விமானசெலவை திமுக ஏற்றதாக அமைச்சர் தங்கம் தென்னரசுமழுப்பினார். திமுக செலவில் ஏற்பாடு செய்த விமானத்தில் அரசு அதிகாரிகள் சென்றது சட்ட விரோதம் என்றும் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றாரா, முதலீடு செய்யச் சென்றாரா என மத்திய அரசுக்கு புகார் சென்றுள்ளது. இந்நிலையில்தான் முதல்வர் டெல்லிக்கு சென்றுள்ளார்.