தமிழகம்

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், அன்புமணி வேட்புமனுக்கள் ஏற்பு

செய்திப்பிரிவு

ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த், அன்புமணி ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை முடிந்தது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணைய இணையதள பதிவேற்றம் அடிப்படையில் 6 ஆயிரத்து 580 வேட்பு மனுக்கள் தாக்கலாகியிருந்தன. இந்நிலையில் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்து வருகிறது.

இதில், ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வேட்புமனு, திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியின் வேட்புமனு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வேட்புமனு, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் வேட்புமனு ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்புமனு, தி.நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

SCROLL FOR NEXT