அருள் பிரசாத் 
தமிழகம்

முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் பாஜக பிரமுகர் கைது

செய்திப்பிரிவு

சேலம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக எடப்பாடியைச் சேர்ந்த பாஜக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். இதுதொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பாஜக மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் அருள் பிரசாத் தனது ட்விட்டரில், “முதல்வர் ஸ்டாலின் அணிந்து சென்ற ஓவர் கோட் ரூ.17 கோடி என்றும், இத்தகவலை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாகவும்” பதிவிட்டுஇருந்தார்.

இதைப் பார்த்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “முதல்வர் குறித்து அவதூறு தகவலை மக்களிடம் பரப்பியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ‘டேக்’ செய்திருந்தார்.

இந்நிலையில், சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாலசுப்ரமணியம் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று அருள் பிரசாத்தை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT