தமிழகம்

டாக்டருக்கு ஜாமீன் கொடுத்ததில் முறைகேடு: நீதிபதி அன்புராஜுக்கு கட்டாய ஓய்வு - உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சிறுநீரக மோசடி வழக்கில் கைதான டாக்டரின் ஜாமீன் விவகாரத்தில் முறைகேடாக நடந்து கொண்டதால், தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆர்.அன்புராஜுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நடந்த சிறுநீரக மோசடி தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த டாக்டர் வி.எம்.கணேசன் கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார். இதை யடுத்து, ஜாமீன் கேட்டு பென்னா கரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கணேசன் மனு தாக்கல் செய் தார். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய் யப்பட்டது. அமர்வு நீதிமன்றத்தில் 2013 ஜூன் 25-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.வணங்காமுடி விடுப்பில் சென்றார். இதனால், கூடுதல் அமர்வு நீதி மன்ற நீதிபதி ஆர்.அன்புராஜ், முதன்மை அமர்வு நீதிமன்ற கூடுதல் பொறுப்பை வகித்தார். அப்போது, முன்தேதியிட்டு ஜூன் 24-ம் தேதியே இந்த வழக்கை நீதிபதி அன்புராஜ் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தும், கணேசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

விடுப்பு முடிந்து பணிக்கு திரும் பிய நீதிபதி வணங்காமுடி, முன் தேதியிட்டு வழக்கை விசாரித்து கணேசனுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து விசாரித்தார். அந்த ஜாமீனை ஜூலை 18-ம் தேதி ரத்து செய்தார். அத்துடன், நீதிபதி அன்புராஜின் செயல்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றத்துக்கு விரிவான அறிக்கை அனுப்பினார்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரணை நடத்தி உயர் நீதி மன்றத்துக்கு அறிக்கை அளித் தார். ‘நீதிபதி அன்புராஜ் மீதான முறைகேடுகள் நிரூபிக்கப்பட் டுள்ளதால் அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கலாம்’ என்று அதில் பரிந்துரை செய்யப்பட்டிருந் தது.

இதைத்தொடர்ந்து, உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டம் நடந்தது. அதில் மூன்றில் இரண்டு பங்கு நீதிபதிகள், நீதிபதி அன்புராஜுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, தற்போது திரு வாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றும் நீதிபதி அன்புராஜுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT