தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளாவில் 16 செ.மீ வரை மழை பெய்துள்ளது. அதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் தெரிந்துள் ளது. சனிக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி, கோவை மாவட்டம் வால்பாறை யில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னகலாரில் 8 செ.மீ., பொள்ளாச்சியில் 3 செ.மீ., கடலூர் மாவட்டம் நெய்வேலி, பரங்கிப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலா, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், சேலம் மாவட் டம் ஆத்தூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரியாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரியாகவும் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.