தமிழகம்

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.37 கோடி பற்றாக்குறை பட்ஜெட்: மேயர், துணை மேயருக்கு ரூ.60 லட்சத்தில் கார்கள் வாங்க அனுமதி

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வருவாய் குறைந்து பட்ஜெட்டில் ரூ.37 கோடி பற்றாக்குறை ஏற்பட் டுள்ள நிலையில் மேயர், துணை மேயருக்கு ரூ.60 லட்சத்தில் கார்கள் வாங்க அனுமதியளித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக் கூட் டம் மேயர் இளமதி தலைமை யில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், பட்ஜெட் மற்றும் தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பட் ஜெட்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூ.39.54 கோடி என்றும், செலவினம் ரூ.76.90 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.37.36 கோடி பற்றாக்குறையாக உள்ளது.

மேயர், துணை மேயருக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் 2 கார்களை வருவாய் நிதியில் இருந்து வாங்குவது, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனங்கள் நிறுத் தும் இடத்தில் கட்டணமின்றி மாற்றுத்திறனாளிகள் வாகனத்தை நிறுத்திக்கொள்ள அனுமதிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின் வருமாறு: பாஜக உறுப்பினர் தனபாலன்: 2016-17-ம் நிதியாண்டில் உள்ளாட் சிப் பிரதிநிதிகள் இருந்தபோது மாநகராட்சியில் நிதி பற்றாக்குறை ரூ.4.5 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது நிதிப் பற்றாக்குறை 37 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இந்த நிதி பற்றாக்குறை எப்படி சரிசெய்யப்படும். மாநில அரசை வலியுறுத்தி நிதி பெறப்போகிறீர்களா அல்லது மக்கள் மீது வரியை சுமத்தி சரி செய்யப்போகிறீர்களா?

ஆணையாளர் சிவசுப்பிர மணியன்: கரோனா காரணமாக மாநகராட்சி வருவாய் பெருமளவில் சரிந்துவிட்டது. மாநகராட்சியின் உண்மையான வரி வருவாய், செலவு ஆகியவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளோம். திண்டுக்கல் நகராட்சியாக இருந்த பகுதியே மாநகராட்சியாக உள்ளது. விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கவில்லை. அதே நேரம் செலவு அதிகரித்துள்ளது.

கணேசன் (மார்க்சிஸ்ட்): உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத ஆண்டுகளில் அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக் கல் செய்ய வேண்டும். முறை கேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT