தமிழகம்

புதுச்சேரியில் இன்று முதல் மீண்டும் விமான சேவை: முதல் விமானத்தில் ஆளுநர் வருகை

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் இருந்து இன்று மீண்டும் விமான சேவை தொடங்குகிறது. முதல் விமானத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசைவரவுள்ள உள்ளார். அவரைமுதல்வர் ரங்கசாமி வரவேற்கவுள்ளார்.

மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் விமான சேவை சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்திற்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கியது. கரோனா காலத்தில்விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் புதுச்சேரி யில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை இன்று தொடங்குகிறது. ஹைதராபாத்தில் இருந்து விமானம் பகல் 12.05க்கு புறப்பட்டு மதியம் 1.30க்கு வந்தடையும். பின்னர் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.15க்கு ஹைதராபாத் சென்றடையும்.

அதேபோல், புதுச்சேரியில் இருந்து பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.50க்கு பெங்களூரு சென்றடையும். பின்னர் பெங்களூருவில் இருந்து மாலை3.20 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரிக்குமாலை 4.10க்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் விமான சேவையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று ஹைதராபாத்தில் இருந்துபுதுச்சேரி வருகிறார். முதல்வர்ரங்கசாமி அவரை வரவேற்கவுள்ளதாக புதுச்சேரி விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனா காலத்தில் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

SCROLL FOR NEXT