இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் அமையவுள்ள மணிமண்டபத்திற்கான இடத்தை ஆய்வுசெய்யும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன். 
தமிழகம்

விழுப்புரம் | இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்

செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சரும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பங்காற் றியவருமான முன்னாள் அமைச்சர் ஆ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் மற்றும் இடஒதுக்கீடு போராட்டத்தில் மரணித்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் விழுப்புரத்தில் அமைய உள்ளது. இந்த இடத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொடரில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் 1987 -ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான 21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் சமூக நீதி தியாகிகள் அரங்கம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

மேலும் பேரறிஞர் அண்ணா மற்றும் மு.கருணாநிதி ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றிய ஆ.கோவிந்தசாமி நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைத்திட ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் ஜானகிபுரம் அருகில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மணிமண்டபம் அமைப் பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரைவில் இங்கு மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்போது தெரிவித்தார்.

முன்னதாக, திண்டிவனம் வட்டம், ஓமந்தூரில் அமைந்துள்ள ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபத்தை பார்வையிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படத் தொகுப்பை வெளியிட அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இடஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 21 சமூக நீதி போராளிகளின் தியா கத்தை மதிக்கக்கூடிய வகையில் அமையவுள்ள மணிமண்ட பத்திற்கான இடத்தை ஆய்வு செய்யும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT