தமிழகம்

என்ஆர் காங்-பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு ஆன பிறகு ஊழல் பட்டியலை வெளியிடுவோம்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் அணை கட்ட ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்னர். தமிழக அரசு இதை கண்டித்து, சட்டப்பேரவையில் தீர்மானம்நிறைவேற்றியுள்ளது.

ஆனால் புதுச்சேரி அரசு இதை வேடிக்கைபார்த்து வருகிறது. வரும் சட்டமன்ற கூட்டத்தில் மேகேதாட்டுவில் அணைகட்டுவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய, கர்நாடக பாஜக அரசிடம் புதுச்சேரி அரசு சரணாகதி அடைந்ததாக கருதப்படும்.

ரங்கசாமி தலைமையில் அரசு அமையும்போதெல்லாம் புதுச்சேரியில் ரவுடிகள் அட்ட காசம் தொடங்கிவிடும். இப்போதும் போலி பத்திரம் தயாரித்து வீடு, நிலம் அபகரிப்பது சர்வ சாதாரணமாக மாறியுள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் புரோக்கர்கள் பேரம் பேசுகின்றனர். பொதுப்பணித்துறையில் பணிகளுக்கு கமிஷன் பெறப்படுகிறது. இந்த அரசு ஊழலில் திளைத்துள்ளது. பள்ளி, கோயில்களுக்கு அருகில் மதுபானக் கடைஅமைக்க ரூ.10 லட்சம் பேரம் பேசப்படுகிறது.

இவற்றை எடுத்துக் கூறினால், ‘நாரா யணசாமி சொத்துக் கணக்கை காட்டுவாரா?’ என கேள்வி எழுப்புகின்றனர். நான் ஏற்கெனவே தேர்தலில் போட்டியிடும்போது, என் சொத்துக் கணக்கை தேர்தல் துறையில் சமர்பித்துள்ளேன். வருமான வரித்துறையில் வரி கட்டுகிறேன். என் சொத்துக்கணக்கை யார் வேண்டுமானாலும் பெற முடியும்.

பாஜக – என.ஆர். காங்கிரஸ் ஆட்சிய மைத்து ஓராண்டு ஆன பிறகு ஊழல் செய்த அனைவரின் பட்டியலை வெளியிடுவோம் என்று குறிப்பிட்டார். பேட்டியின்போது காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT