தமிழகம்

புதுச்சேரியில் பந்தல் சரிந்து இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி பாரதி வீதியில் அமைந் துள்ளது காமாட்சி அம்மன் கோயில். சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலின் முகப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. நேற்று மாலையும் இப்பணி நடந்தது. இப்பணிக்கான ஒப்பந் ததாரராக மணி உள்ளார்.

பந்தல் அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர் மணி மகன் வேலு,சீர்காழியை சேர்ந்த ஆறுமுகம், லட்சுமணன், முத்துலிங்கம் ஆகி யோர் ஈடுபட்டிருந்தனர் ‌. அப்போது பந்தல் சரிந்து விழுந்து, வேலை செய்துகொண்டிருந்த 4 பேரும் மேலே இருந்து விழுந்தனர். காயமடைந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தில் வேலு, சீர் காழியை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். லட்சுமணன், முத்துலிங்கம் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரியக் கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்ற்னர்.

வேலை செய்து கொண்டிருந்த 4 பேரும் மேலே இருந்து விழுந்தனர்.

SCROLL FOR NEXT