தமிழகம்

என்டிசி ஆலைகளை திறக்க கோரி பெண் தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

செய்திப்பிரிவு

கோவை: தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்டிசி)கீழ் உள்ள ஆலைகளை திறக்க வலியுறுத்தி கோவையில் பெண் தொழிலாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் 24-ம் தேதி முதல் என்டிசி ஆலைகள் இயக்கப்படவில்லை. இதனால் நாட்டில் உள்ள 23 என்டிசி ஆலை தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் சேர்ந்து போராடி வருகின்றன. கோவை பீளமேட்டில் உள்ள ரங்க விலாஸ் ஆலை, சாயிபாபா காலனியில் உள்ள முருகன் ஆலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் பலர் ஆலையின் உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்க தலைவர் டி.எஸ்.ராஜாமணி கூறும்போது, “வேலை இல்லாத நிலையில் குடும்ப சூழலை சமாளிக்க முடியாமல் பெண் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் தாமாக திரண்டு போராடி வருகின்றனர். இதை மத்திய அரசுகவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய பஞ்சாலைக் கழகத்தின் கீழ் உள்ள பஞ்சாலைகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் கூட்டாக சேர்ந்து சந்திக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT