தமிழகம்

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் பொது பட்ஜெட் கடந்த 18-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 19-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் 21-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தன.

விவாதங்களுக்கு நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் நேற்று பதில் அளித்துப் பேசினர். தமிழகத்தை வாழ்விடமாக கொள்ளாத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலச் சட்டத்திருத்தம் உள்ளிட்ட 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், பேரவையை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இத்தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, தேதிகுறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

SCROLL FOR NEXT